follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு!

பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு!

Published on

2023 வரவுசெலவுத்திட்ட உரை முன்வைக்கப்படுவதையிட்டு பாராளுமன்றத்தில்
மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவிப்பு

2022 நவம்பர் மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை கௌரவ நிதி அமைச்சரினால் 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரை முன்வைக்கப்படவிருப்பதை முன்னிட்டு கடந்த வருடங்களைப் போன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய, உறுப்பினர்களின் ஓய்வறைகள், ஆடை அலுமாரிகள் உட்பட
பாராளுமன்றத்தின் முழு கட்டடமும் நாளையதினம் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் 14ஆம் திகதி பொதுமக்கள் கலரி வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

பாராளுமன்ற வாகனத் தரிப்பிடம் அன்றையதினம் மூடப்பட்டிருப்பதுடன், உறுப்பினர்கள் வருகை தரும் வாகனங்கள் உரிய தரிப்பிடத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

அன்றையதினம் பாராளுமன்றத்துக்கு வருகைதரும் உறுப்பினர்கள் முடிந்தளவு தமது சாரதிகளுடன் வருமாறு சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வாகனத்தை தாமே செலுத்திவந்தால்
அவ்வாகனங்களை வாகனத் தரிப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு உறுப்பினர்களின் நுழைவாயிலுக்கு அருகில் பாராளுமன்ற பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் சபாநாயகர் தனது அறிவிப்பில் தெரிவித்தார்.

அத்துடன், அன்றையதினம் போக்குவரத்துப் பொலிஸார் மற்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனைத்துப் பாராளுமன்ற
உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...