follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுமாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை

மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை

Published on

முதலாம் தரத்திலிருந்து, மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த, 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரச பாடசாலைகளின், முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களுக்கான, சுமார் 13 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்சியளிக்கப்பட உள்ளனர்.

எதிர்வரும் 18 ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில், இந்த நடவடிக்கையை முன்னெடுக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில மொழிமூலப் பாடப்புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அவ்வாறான இலக்கணப் பிழைகள் உள்ளதா என்பதைக் கண்டறியுமாறு தேசிய கல்வி நிறுவகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹர்ஷான் டி சில்வா கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு...