follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுஇரும்பு கம்பியின் விலையில் வீழ்ச்சி

இரும்பு கம்பியின் விலையில் வீழ்ச்சி

Published on

கடந்த காலங்களில் பாரிய அளவில் அதிகரிப்பை பதிவு செய்திருந்த இரும்பு கம்பியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, ஒரு டன் கம்பியின் விலை ஒரு லட்சம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஒரு டன் கம்பியின் விலை தற்போது 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 10 மில்லிமீற்றர் இரும்பு கம்பி, தற்போது 1635 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. 2700 ரூபாவுக்கு விற்கப்பட்ட 12 மில்லிமீற்றர் கம்பி, 2395 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

அத்துடன் 16 மில்லிமீற்றர் கம்பியின் விலை 4325 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதேவேளை 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து ஒரு மூடை தற்போது சந்தையில் 2975 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக...