follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுதொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை

தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Published on

நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பல தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நோய் தொற்று தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

குறிப்பாக நாட்டில் பரவலாக காணப்பட பல தொற்று நோய்களை நாம் ஒழித்துள்ளோம். எம்மால் மலேரியா, அம்மை நோய்கள் மற்றும் தொழு நோய்கள் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டது.

இருப்பினும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது தொற்று நோய்கள் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். எதிர்காலத்தில் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாம் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும், இலங்கையில் காசநோய் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக நோயை அடையாளம் காண்பதற்கு தாமதம் ஏற்படுகிறது.

அதனால் தான் நோயை அகற்றுவதற்கான வாய்ப்பில்லாமல் போகிறது. இந்நிலையில் இது போன்ற நோய்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

சடுதியாக அதிகரித்துள்ள எலுமிச்சை விலை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தையில் கேரட்டின் விலை அதிகரித்துள்ளதைப் போன்று, நாட்டின் பல பகுதிகளில் இப்போது ஒரு...

இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட பசுமை இல்லம்

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குத்...

ஞாயிற்றுக்கிழமை விசேட போக்குவரத்து திட்டம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நாடாளுமன்ற மைதானத்தில்...