follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஅரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Published on

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை திங்கட்கிழமை (14) சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியின் பிரகாரம் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கீழ் 1283 நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் 29 அமைச்சகங்கள் மற்றும் 99 அரசு துறைகள் என்று பட்டியல் வெளிப்படுத்துகிறது.

25 மாவட்ட செயலகங்கள், 09 மாகாண சபைகள், 341 பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் உட்பட 420 அரசு நிறுவனங்கள் இருப்பதாக பட்டியலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...