follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுமாறு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுமாறு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

Published on

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான TELO மற்றும் PLOTE ஆகியன கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம்  சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

PLOTE எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்  தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்  செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

பல தடவைகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தைக் கூட்டுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தாலும், அது பல காலமாக நடைபெறாமல் இருப்பது கவலைக்குரியது என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமை காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான பரிமாற்றங்கள் சீர்குலைந்துள்ளதாகவும் குறித்த கடிதம் தொடர்கின்றது.

இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பாரிய நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்களுடைய எண்ணங்களில் குழப்பமும் சந்தேகமும் தோன்றுவதை அவதானிக்க முடிவதுடன், மக்கள் வௌிப்படையாகவே கூட்டமைப்பில் நிலவும் குழப்ப நிலைமைகளை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TELO மற்றும் PLOTE ஆகிய கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போது, கூட்டம் நிச்சயமாகக் கூட்டப்படும் என தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு...

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல்...

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில்...