follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP1ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து மைத்திரி தப்ப முடியாது

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து மைத்திரி தப்ப முடியாது

Published on

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என, தாக்குதல் நடந்த போது நினைக்காதது போல், இப்போதும் நினைக்கிறார் என்றும் இது அரசாங்கத்தின் நிலைப்பாடு என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இன்று (13) நாடாளுமன்றத்தில் வாய்மூல பதிலை எதிர்பார்த்து வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் –
“…ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கேள்வியை நான் கேட்கிறேன். வரும் ஏப்ரலில் ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இப்படி கேள்வி கேட்கும் போது இன்னும் 2 வாரம் அவகாசம் கேட்கிறார்கள். இன்று கேள்விகள் கேட்க வேண்டிய நாள். இன்று ஜனாதிபதியும் உங்கள் அரசாங்கமும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றனர். மறுபுறம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்துவதற்கு உங்களின் ஆளும் கட்சி இதற்கு முன்னைய காலங்களில் மிகத் தெளிவாகப் பயன்படுத்தியது. ரணில் விக்கிரமசிங்க உங்களின் பக்கம் வந்து பத்திரமாக மலையேறியுள்ளதாலும், மைத்திரிபால சிறிசேன அவருக்கு அரசியல் எதிரியாகி வருவதாலும் இந்தப் பிரச்சினை மேலும் நீடிக்குமா என்பது புரியவில்லை..”

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் –
“.ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் இடம்பெற்ற போது நாட்டின் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர், தளபதி, பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் ஒருவரே என்பது ஆரம்பம் முதல் எங்களின் நிலைப்பாடாகும். அதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அப்பொழுதெல்லாம் அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருக்கலாம் என்று அன்று நினைக்கவும் இல்லை, இன்று நினைப்பதுமில்லை. அதுதான் எங்களின் நிலைப்பாடு…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு – 03 நாட்களுக்கு நிறுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும்...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின்...

தேர்தல் தினத்தன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டு

எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்...