follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுவிசேட பிரகடனத்தில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி

விசேட பிரகடனத்தில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி

Published on

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ பத்திரம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்க தேரரிடம் கையளித்தார். ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்க தேரரின் ஜனன தினத்தை முன்னிட்டு இன்று விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, தேரரிடம் நலம் விசாரித்தார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பௌத்த மக்களால் பெரிதும் மதிக்கப்படும் ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்.

கங்காராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தலைமையில் மகா சங்கத்தினர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, உபாலி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிமல் வெல்கம மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...