follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி புலமைப்பரிசிலுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

ஜனாதிபதி புலமைப்பரிசிலுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

Published on

2021(2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை 2022 டிசம்பர் 30 வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி ஏற்கனவே 2022-12-23 என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெற்றோரும் மாணவர்களும் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோள்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து 2022-12-30 ஆம் திகதிக்கு முன்னர் தாம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலையின் அதிபரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

மேலும் 2022-12-23 ஆம் திகதி தொடக்கம் 2023-01-02 ஆம் திகதி வரையான காலப்பகுதி பாடசாலை விடுமுறை ஆகையால் இதற்காக பாடசாலை அலுவலகங்களை திறந்து வைக்கும்படியும் மாணவர்களால் கொண்டுவரப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி நிதியம் கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.
மேலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி 2022-12-30 வரை நீடிக்கப்பட்டுள்ளதே தவிர, விண்ணப்பதாரிகளை தெரிவு செய்யும் செயன்முறைக்காக நியமிக்கப்பட்ட கால வரையறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என்றும் ஜனாதிபதி நிதியம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...