follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉள்நாடுஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய நியமனங்கள்

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய நியமனங்கள்

Published on

2023 ஜனவரி 01, முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

இதன்படி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய எச்.கே.டி.டபிள்யூ. எம்.என்.பி. ஹபுஹின்ன, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்.மாவட்டச் செயலாளராக பணியாற்றிய கே. மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராகவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றிய எம். யமுனா பெரேரா, மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றிய எம்.எம். நைமுதீன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராகவும், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய பி.பி. குணதிலக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராகப் பணியாற்றிய ஏ.எம்.பி.எம்.பி. அத்தபத்து வணிக, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராவும் விவசாய அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றிய ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யு.டி.சி. ஜயலால், கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க ஆகியோரின் பதவிக் காலம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி – சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல்...

சப்ரகமுவ பல்கலை மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய மூவரடங்கிய குழு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...