follow the truth

follow the truth

May, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஉள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்பு.. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு..

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்பு.. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு..

Published on

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தாமதமானால், அடுத்த தேர்தலாக ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால், ஒரு வருடத்திற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பு விசேட சந்தர்ப்பத்தை வழங்கியமையினால், அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டால் அது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முடிவைப் பாதிக்கும் என்பதால் உள்ளூராட்சித் தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 17, 2024 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வேட்பாளராகப் போட்டியிட்டால், நவம்பர் 17, 2023 க்குப் பிறகு அழைக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...