follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபரிசீலனை முடியும் வரை மின்வெட்டு இல்லை

பரிசீலனை முடியும் வரை மின்வெட்டு இல்லை

Published on

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை நிறைவடையும் வரை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை இன்று(02) உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நிறைவடையும் வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படக்கூடாது என வழங்கப்பட்ட உத்தரவை மீறி, இலங்கை மின்சார சபை செயற்பட்டமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித இஹலஹேவா இந்த உ றுதிமொழியை வழங்கியதுடன், இலங்கை மின்சார சபையூடாக திட்டமிட்டவகையில் குறித்த காலப்பகுதிக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் மன்றுக்கு கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பீ.பத்மன் சூரசேன, யசந்த கோத்தாகொட, ஷிரான் குணதிலக்க ஆகியோர் முன்னிலையில் இந்த மனு மீதான பரிசீலனை முன்னெடுக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

அரச துறையில் ஊழலைத் தடுக்க புதிய வேலைத் திட்டம்

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க...

ஷொப்பிங் பைகளின் விலை நிர்ணயம் தொடர்பில் அவதானம்

வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் விலை நிர்ணயம் தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி...

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்

மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்காக நிலவும் சட்டம் கட்டாயமாக திருத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத்...