follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுகொல்லப்பட்ட வர்த்தகரின் உடல் DNA பரிசோதனைக்கு

கொல்லப்பட்ட வர்த்தகரின் உடல் DNA பரிசோதனைக்கு

Published on

பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் நீச்சல் தடாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர ஆடை வர்த்தகரின் பிரேத பரிசோதனை இன்று (06) சட்ட வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் அவரது டிஎன்ஏ பரிசோதனையும் அங்கு நடைபெற உள்ளது.

பிரேதப் பரிசோதனை கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருந்த நிலையில், சடலம் நீரில் மூழ்கியதால், உறவினர்களால் அடையாளம் காண முடியாததால், இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான தம்பதியினர் நேற்று (05) பிற்பகல் கந்தானை பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக முன்னர் சந்தேகிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அவர்கள் வெளிநாடு செல்ல முயற்சி தோல்வியடைந்ததும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இரு தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...