துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 21 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு பலியானவர்களில் துருக்கி நாட்டில் மட்டும் 17 406 பேரும். மேலும் சிரியா நாட்டில் 3,317 பேர் பலியாகியுள்ளனர்.
கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கருதப்படுகிறது.
ஒருஇலட்சத்திற்கும் அதிகமானவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும் போதிய வாகனங்கள் இன்மை சேதமடைந்துள்ள வீதிகள் போன்றவற்றால் அவர்களின் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.