follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஜூலை மாதத்திற்குள் அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாகிறது

ஜூலை மாதத்திற்குள் அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாகிறது

Published on

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணம் செலுத்துதல் மற்றும் வசூல் செய்வதற்கு இலத்திரனியல் கொடுப்பனவுகளை கட்டாயமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தொழில்நுட்ப அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இராஜாங்க அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பொதுமக்கள் அரச நிறுவனங்களுக்குச் சென்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் இலத்திரனியல் பணம் செலுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் பல அரச நிறுவனங்களில் இல்லை என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தத் திட்டத்தை தொழில்நுட்ப அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது, அதன்படி எதிர்காலத்தில் பொதுத்துறையில் அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சேகரிப்புகளுக்கு மின்னணு கட்டண வசதியை வழங்குவது கட்டாயமாகும்.

தொழில்நுட்ப அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜானக சம்பத் கீகியானகே கூறுகையில், எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தேவையான தொழிநுட்ப வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிதி அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களை தயாரித்து, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...