உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
தேர்தலை பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தமது கட்சி திட்டமிட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“.. அரசு தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு உத்திகளை கையாளுகின்றமை தெளிவாகின்றது. இந்தத் தேர்தலுக்கு தேவையான பணத்தினை அரசு வழங்காது வேணுமென்றே தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சிக்கின்றது. அரசு பாரியளவில் தோல்வியை சந்திக்கும் என அரசு பயப்படுகின்றது. அதற்காகவே தேர்தல் நாடகம் ஆடப்படுகின்றது.. அதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, எமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்துகிறோம். ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று தான் தேர்தல் உரிமையும். அதனை இல்லாமல் செய்யும் அரசின் முயற்சிக்கு எதிராக இன்று மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருக்கின்றோம்…”