உயர்மட்டப் பாதையில் பயணிக்கும் அனைத்துப் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளும் மாகும்புர பல்வகைப் போக்குவரத்து நிலையத்தின் ஊடாகச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை மார்ச் 1ம் திகதி முதல் அமுல்படுத்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.