follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுபொதுத் தேர்தல் இல்லாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது

பொதுத் தேர்தல் இல்லாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது

Published on

அரசாங்கத்தை தெரிவு செய்வது அல்லது மாற்றுவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், வீதிகள் அதற்கு தெரிவு இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, நாடாளுமன்றத் தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்ல பலன்கள் விரைவில் கிடைக்கப் போவதாகவும், பொருளாதார வீழ்ச்சியால் நாடுகள் அராஜகமாக மாறும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே ஒரு நாட்டின் அரசியலமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி திருகோணமலை விமானப்படை தளத்தில் விமானப்படை கெடட்களை கலைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும்

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும்...

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபா கொடுப்பனவு

அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன்,...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை

350 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட சுகாதார...