follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுவயிற்றைப் பற்றி மட்டுமல்ல நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமாம் : மொட்டுக் கட்சிக் அறிவுரை

வயிற்றைப் பற்றி மட்டுமல்ல நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமாம் : மொட்டுக் கட்சிக் அறிவுரை

Published on

சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் மக்கள் வயிற்றைப் பற்றி சிந்திக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி யோசிக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

வயிற்றை பற்றி மாத்திரம் சிந்தித்துவிட்டு நாட்டை பற்றி சிந்திக்காமல் விட்டுவிட்டால் எதிர்கால சந்ததியினரின் சாபத்திற்கு நாம் அனைவரும் உள்ளாக நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலக பொருளாதாரம் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் அதன் தாக்கம் இலங்கைக்கும் ஏற்படும் எனவும், அவ்வாறு நேரிடும் போது அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு...

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல்...

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில்...