அமைச்சர்களை நியமிக்கும் படலம் சில காலத்திற்கு ஒத்திவைப்பு

724

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்தவுடன் புதிய அமைச்சரவை (அமைச்சர்கள்) நியமனம் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பணப்பிரச்சினை காரணமாக தற்போது புதிய அமைச்சர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் முதலில் தீர்மானித்திருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ள பத்து உறுப்பினர்களின் பட்டியலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கட்சி அண்மையில் கையளித்துள்ளது.

ஆனால் அந்தப் பட்டியலில் இருந்து முன்னாள் அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி மட்டுமே நியமிக்கப்பட்டார்.

புதிய அமைச்சர்கள் பட்டியலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here