follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1"திறந்த பல்கலைக்கழகத்தை தனியார்மயமாக்க முயற்சி"

“திறந்த பல்கலைக்கழகத்தை தனியார்மயமாக்க முயற்சி”

Published on

திறந்த பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து நீக்கி தனியான தனியார் பல்கலைக்கழகமாக பேணுவதற்கான சட்டமூலத்தை நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தயாரித்துள்ளதாக பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அப்துல்லா மொஹமட் ரிஃபாக் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி பாடத்திற்கு தொடர்பில்லாத நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி குழுவொன்று நியமிக்கப்பட்டு இந்த சட்டமூலத்தை தயாரித்ததாகவும் தலைவர் தெரிவித்தார்.

உயர்கல்வித் துறை தொடர்பான இந்த வரைவு உயர்கல்வி அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரின் பங்களிப்பு இன்றி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல்கலைக்கழகத்தில் வெளி கட்சிகள் இவ்வாறு தலையிட முடியாது எனவும், இந்த சட்டமூலத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, திறந்த பல்கலைக்கழகக் கட்டணங்கள் 55 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மாணவர்கள் மிகவும் அவதியுறுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 34,000 மாணவர்களில் 40 வீதமானோர் தமது கற்கைநெறிகளை கைவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, கென்டீன் பிரச்சினை, விடுதி பிரச்சினை, கருத்துக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளை பல்கலைகழகத்தில் மாணவர்கள் சந்தித்து வருவதாக அப்துல்லா முகமது ரிஃபாக் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...