follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1'நான் அமைச்சர் பதவிக்கு பிச்சை எடுக்கவில்லை' - ராஜிதவுக்கு கெஹலிய பதிலடி

‘நான் அமைச்சர் பதவிக்கு பிச்சை எடுக்கவில்லை’ – ராஜிதவுக்கு கெஹலிய பதிலடி

Published on

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என அண்மையில் அறிவித்திருந்தார்.

தற்போது சுகாதார சேவை நிலைமை மிகவும் சோகமாக இருப்பதாகவும் அப்போது பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கைக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (07) கண்டியில் பதிலளிக்கையில்;

“.. இலங்கையின் மிகவும் பாரதூரமான சவாலான காலத்தில் தான் நான் அமைச்சரானேன். நாளைய தினம் பற்றிய நம்பிக்கை இல்லாத நேரம், ஆர்ப்பாட்டங்கள் சாந்தி சந்தியாக இருக்கும் நேரத்தில், 69 இலட்சம் வாக்குகளை பெற்ற நிறைவேற்று ஜனாதிபதி, ஆர்ப்பாட்டத்தின் விளைவினால் மிகவும் கொடூரமான முறையில் அனைவரையும் பதவி விலகும் ஒரு சூழலில் தான் நான் சுகாதார அமைச்சராக பதவியேற்றேன். அதிகமானோருக்கு கற்பனை கதைகளை கூற முடியும், அன்று யாருமே முன்வரவில்லையே.. இருந்தவர்களும் பின்கதவினால் ஓடினார்கள்.

சுகாதார துறை என்பது ஏனைய துறைகளை விட சற்று அல்ல நிறையவே மாறுபட்டதொன்று. ஏனென்றால், வெங்காயம், மிளகாய், பருப்பு போன்று விலைகளை கூட்டவும் குறைக்கவும் மருந்து வகைகளுக்கு முடியாது. அதற்கென ஒரு முறைமை உள்ளது. 85% மருந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது வெளிநாடுகளில் இருந்து. அப்போது எமது கையிருப்பு டொலர் மில்லியன் கூட இருக்கவில்லை. கையிருப்பு வீழ்ச்சியடைந்திருந்த அந்தத் தருணத்தில் மருந்துகள் 85% ஆனவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவது இலேசான காரியமல்ல. அதற்கு பட்ட பாட்டினை அமைச்சர் என்ற முறையிலும் அமைச்சின் செயலாளர் என்ற முறையிலும் நாம் வார்த்தையில் கூற முடியாது. அதை விட்டு கற்பனைக் கதைகளை கூறுவோருக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.

நான் அரசியலில் 30 வருட காலமாக உள்ளேன், 21 வருட அமைச்சரவை அமைச்சராக இருந்துள்ளேன். இத்தனை வருடத்திலும் நான் அமைச்சு வேண்டும் என்று பிச்சை எடுக்கவில்லை. நான் ராஜித அவர்களை பற்றியல்ல என்னைப் பற்றிக் கூறுகிறேன். அதனை தப்பாக திரிவுபடுத்திக் கூற வேண்டாம். நான் இதுவரைக்கும் அமைச்சுப் பதவி கோரி பிச்சை எடுத்ததில்லை..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிலியந்தலையில் குப்பை மேட்டில் தீ விபத்து

பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் இன்று (08) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தின்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : “நியாயம் உறுதி செய்யப்படும்”- ஜனாதிபதி

பின்தங்கிய சமூகங்களில் மனிதாபிமானத்தின் உயிரோட்டத்தையும் ஆன்மீக பண்புகளையும் மீண்டும் கொண்டுவரும் முயற்சியில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பங்களிப்பு...

வைத்தியர் மஹேஷி விஜேரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்...