follow the truth

follow the truth

May, 23, 2024
Homeஉள்நாடு'குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதை நான் எதிர்க்கிறேன்..'

‘குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதை நான் எதிர்க்கிறேன்..’

Published on

குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஆய்வகங்களில் சித்திரவதைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

முன்னாள் வனஜீவராசிகள் அமைச்சர் என்ற வகையில் தாம் இந்தச் செயலுக்கு முற்றாக எதிரானதாகவும், இது அருவருக்கத்தக்க செயல் எனவும் அமைச்சர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மிருகக்காட்சிசாலைகளுக்கிடையிலான பரிமாற்ற நிகழ்ச்சிகளைத் தவிர, பெரிய அளவில் விலங்குகளை ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும், இலங்கையில் விதிகள் கூட இல்லை என்றும் நவீன் திஸாநாயக்க வலியுறுத்துகிறார்.

விலங்குகள் தங்கள் இயற்கையான வாழ்விடங்களில் சுற்றித் திரிவதற்கு முழு உரிமை உண்டு எனவும் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க புதிய முறை

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் மின்விநியோகத் தடை தொடர்பில் அறிவிக்க புதிய முறைமையை இலங்கை...

நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்தால் நோயாளி உயிரிழப்பு?

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 31 வயதுடைய நோயாளி ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து...

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதிக்கு உட்பட்டே தனியார் துறையின் முதலீடுகளுக்காக அரச நிறுவனங்கள் வழங்கப்படும் எனவும் மதிப்பிடப்பட்ட தொகைக்கு குறைவான...