follow the truth

follow the truth

June, 5, 2024
Homeஉள்நாடுகுரங்கு கதை பற்றி சீனா தனது நிலைப்பாட்டை அறிவித்தது

குரங்கு கதை பற்றி சீனா தனது நிலைப்பாட்டை அறிவித்தது

Published on

இலங்கையில் இருந்து 100,000 குரங்குளை கொண்டு வருமாறு எந்தவொரு தரப்பினரும் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைக்கவில்லை என சீன தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் எந்தவொரு தரப்பினரும் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கவில்லை என அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீனா எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும், இது தொடர்பான சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தீவிரமாக பங்களிப்பதாகவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 11ஆம் திகதி விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை விலங்குகளை சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 100,000 குரங்குகளை வழங்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இது தொடர்பான மேலதிக விடயங்களை ஆராய அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

ஏழு நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள...

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் திகதி

புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில்...