follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1வடமேல் மாகாணத்தில் மாடுகளுக்கு பரவி வரும் தோல் நோய் மத்திய மாகாணத்திலும்

வடமேல் மாகாணத்தில் மாடுகளுக்கு பரவி வரும் தோல் நோய் மத்திய மாகாணத்திலும்

Published on

வடமேல் மாகாணத்தில் மாடுகளுக்கு பரவி வரும் தோல் நோய் மத்திய மாகாணத்தில் உள்ள பல கால்நடை பிரிவுகளில் பதிவாகியுள்ளதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை மற்றும் கலேவெல கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் ராகலை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய உடுநுவர குவாட்டல்வ பிரதேச கால்நடை வைத்தியர்கள் என மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஆர்.எம்.கே.பீ.ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இந்த கால்நடை நோய் உத்தியோகபூர்வ பிரிவுகளில் பதிவாகியுள்ளது.

இவற்றில் பெரும்பாலான பிரிவுகள் தம்புள்ளை பிரதேசத்திலிருந்தும் சில பிரிவுகள் ஏனைய பிரிவுகளிலிருந்தும் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் திருமதி ராஜநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது ஒரு வைரஸ் நோய் என்பதால், நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உடனடி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நோய் பதிவாகியுள்ள பிரிவுகளிலிருந்து விலங்குகளை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மாடுகளின் முதுகில் கட்டிகள் தோன்றுவதன் மூலமும் தோல் நோய்த்தொற்றுகள் மூலமும் இந்நோயை அடையாளம் காண முடியும் எனவும், மாடுகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அருகில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் மாகாண பணிப்பாளர் திருமதி ராஜநாயகம் விவசாயிகளை கேட்டுக்கொள்கிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...