முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாட்ஸ்அப் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.
உங்களுக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன். தேசிய வளங்களை விற்பனை செய்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த வட்ஸ்அப் செய்தியை முன்னாள் ஜனாதிபதி வாசித்த போதும் சரத் வீரசேகரவுக்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்ப நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவருடன் நல்லுறவை வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.