follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுஅடுத்த வாரம் புதிய பொலிஸ்மா அதிபர்?

அடுத்த வாரம் புதிய பொலிஸ்மா அதிபர்?

Published on

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில் அரசாங்கம் அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பை வழங்கியது.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இடம் வினவிய போது, ​​பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படும் அதிகாரி தொடர்பில் ஜனாதிபதி வருகை தந்த பின்னர் அவருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதாக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...

அஸ்வெசும – ஜூலை 16 வரை மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...