follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடனுதவி

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடனுதவி

Published on

பாகிஸ்தானுக்கு 03 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி வழங்குவது தொடர்பாகசர்வதேச நாணய நிதி, நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட குறித்த பிரேரணைக்கு நிதி நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பாகிஸ்தான் கடன் தொகையை பகுதிகளாகப் பெறும்.

அதன்படி முதலில் பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும். மீதமுள்ள தொகை அடுத்த 09 மாதங்களுக்குள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடும் நிதி நெருக்கடியால் பொருளாதாரம் சரிவின் விளிம்பில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இந்த கடன் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சவூதி அரேபியாவிடமிருந்து 02 பில்லியன் அமெரிக்க டொலர்களும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...