follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1தவறை ஒப்புக்கொண்ட சபாநாயகர் இராஜினாமா

தவறை ஒப்புக்கொண்ட சபாநாயகர் இராஜினாமா

Published on

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் டான் சுவான் ஜின், நாடாளுமன்ற உறுப்பினர் உதவிப் பேராசிரியர் ஜேம்ஸ் லிம்மிடம் விவாதத்தின்போது ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றத்திற்காக அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

டான் சுவான் ஜின், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து, நாடாளுமன்றத்தில் நாகரீகமற்ற மற்றும் பொருத்தமற்ற அவதூறுகளைப் பேசியதன் மூலம் தவறு செய்ததாகவும், அதன் விளைவாக, சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.

டான் சுவான் ஜினுடன், அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் செங் லீ வேயும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். டான் சுவான் ஜின் திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார். செங் லீ வெய்க்கு சுவான் ஜினுடன் ஒரு முறைகேடான உறவு மற்றும் அந்த உறவு அவரது இராஜினாமாவிற்கு வழிவகுத்தது.

டான் சுவான் ஜினின் இந்த முடிவுக்குப் பதிலளித்த பிரதமர் லீ சியென் லாங், நாடாளுமன்ற மரபுக்கு மாறாக நடந்து கொண்டதன் மூலம் தவறு செய்ததை ஒப்புக்கொண்டதை பாராட்டுவதாகவும், நாடாளுமன்றத்தில் இருந்து விலகுவதற்கான தனது முடிவைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

டான் சுவான் ஜின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர், தனது அனைத்துப் பொறுப்புகளையும் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் எட்வின் டோங்கிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் மீது ஊழல் விசாரணை நடைபெற்று வரும் வேளையில், முறைகேடு காரணமாக மேலும் இரு எம்.பி.க்கள் இராஜினாமா செய்திருப்பது சிங்கப்பூர் ஆளும் கட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்திற்கு மோடி இரங்கல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர், மறைந்த ஈரானிய...

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மற்ற அதிகாரிகள் யார்?

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள டிஸ்மார் காட்டில் ஹெலிகாப்டர் விபத்தில்...

ரைசியின் மரணம் ஆழ்ந்த வருத்தமளிக்கிறது – வெனிசுலா

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro), ரைசியின் மரணத்தால் ‘ஆழ்ந்த வருத்தம்’ அடைவதாக தனது இரங்கல்...