follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் கனடா

அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் கனடா

Published on

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி இந்த வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை அமைச்சர் பதவிகள் தொடர்பாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத அமைச்சர்களுக்குப் பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கனடா அரசாங்கத் தரப்புகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி கனடாவின் சுகாதார அமைச்சர் பதவியையும் இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2015-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ, தனது அமைச்சரவையை அவ்வப்போது திருத்தி வருகிறார்.

எவ்வாறாயினும், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னரே கனடா பிரதமர் தனது அமைச்சரவையை மாற்றியமைப்பது இதுவே கடைசித் தடவை என சர்வதேச விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், அமைச்சரவை அமைச்சர்கள் 03 பேர் இன்று காலை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்கவிருந்த நிலையில் குறித்த சந்திப்பும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...