follow the truth

follow the truth

August, 10, 2025
HomeTOP1'தேசிய கீதத்தை பாடும் போது சுருதி கூடியமையினை ஏற்றுக் கொள்கிறேன்'

‘தேசிய கீதத்தை பாடும் போது சுருதி கூடியமையினை ஏற்றுக் கொள்கிறேன்’

Published on

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போது தேசிய கீதத்தை திரிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாடகி உமாரா சிங்கவன்ச, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு நேற்று (7) வந்ததாக மேலதிக செயலாளர் தம்மிக்க முத்துகல ‘டெய்லி சிலோன்’ செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் உமாராவுக்கு மேலதிகமாக, கிரிக்கெட் சபை மற்றும் கல்வி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் (இசை) ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்வின் போது தேசிய கீதம் பாடுவது தொடர்பாக கல்வி அமைச்சின் பணிப்பாளரின் (இசை) ஆலோசனையின் பேரில் நடத்தப்படுகின்றமையினாலேயே அவர் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.

தேசிய கீதத்தை பாடும் போது ‘மஹதா’ என்ற வார்த்தைகளை உச்சரிக்கவில்லை என்றும், அதிக சுருதியில் பாடியதாகவும் உமாராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊடகங்களில் வெளியான பாடல் எதிரொலியால் ‘மாதா’ என்ற வார்த்தை ‘மஹதா’ என பிரசாரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் (இசை) வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கீதம் குறைந்த தொனியில் பாடப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் புலனாய்வுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இந்த வாரத்திற்குள் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரிக்க அமைச்சு உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளர் தம்மிக்க முத்துகல தெரிவித்திருந்தார்.

உமாரா சிங்கவன்சவும் தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து தனது முகநூல் கணக்கில் மன்னிப்புக் கடிதம் ஒன்றை பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...