follow the truth

follow the truth

August, 21, 2025
HomeTOP1விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடு செல்ல விடுமுறை வழங்கப்படாது

விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடு செல்ல விடுமுறை வழங்கப்படாது

Published on

மயக்கவியல் நிபுணர்கள் உள்ளிட்ட தற்போது இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான விசேட வைத்திய நிபுணர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை வழங்காதிருக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவையில் கடும் வைத்தியர் பற்றாக்குறை நிலவும் பல பகுதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு செல்வார்களாயின், அவர்களை பணிநீக்கம் செய்து தேவையான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் குறிப்பிட்ட சில துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றதால் கடந்த காலங்களில் இவ்வாறான வைத்தியர்களின் புலம்பெயர்வினால் நாட்டின் சுகாதார சேவையில் நெருக்கடி நிலை ஏற்பட்டது.

சுமார் 600-இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் விசேட பயிற்சிக்காக தற்போது வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர்களில் சுமார் 300 பேர் இந்த ஆண்டு நாடு திரும்பவுள்ளார்கள் என்றும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் வருகையின் பின்னர் தற்போது ஒவ்வொரு துறையிலும் தற்போது நிலவும் நிபுணத்துவம் பெற்றவர்களின் பற்றாக்குறை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வருட காலத்திற்குள் 274 வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியது.

குறித்த காலப் பகுதிக்குள் விசேட தரங்களைச் சேர்ந்த 842 வைத்திய அதிகாரிகளும் நாட்டிலிருந்து சென்றுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...