follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1டிசம்பரில் பிரதமர் பதவியில் மாற்றம்

டிசம்பரில் பிரதமர் பதவியில் மாற்றம்

Published on

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க மேற்குலக தூதரகம் இரகசிய சதியை ஆரம்பித்துள்ளதாக “சதிய” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படும் தினேஷுக்கு பல சக்திவாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு பிரதமரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதியின் வருகைக்கு சம்பந்தப்பட்ட தூதரகமும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த நாளிதழ் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கரியமில வைப்பு கொள்கையின் கீழ் இலங்கைக்கு 12 பில்லியன் டொலர்கள் கிடைக்க உள்ளதாகவும், இது முன்னாள் நோவிடன் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பணத்தில் ஜனாதிபதி தேர்தல் அல்லது தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை...