அருவக்காலு சுகாதார கழிவுகளை சேகரிக்கும் திட்டத்திற்கு 21,045 மில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், கடந்த வருட இறுதி வரை இத்திட்டத்தினால் எதிர்பார்த்த பலன்களை பெற முடியவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன.
வெள்ள அனர்த்த நிலைமைகளை கையாள்வதற்கு அருவக்காலு சுகாதார குப்பை சேகரிப்பு நிலையம் பொருத்தமான அமைப்பை தயாரிக்கவில்லை எனவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கி செயலிழந்த இயந்திரங்கள் கடந்த ஆண்டு இறுதிவரை மீட்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.