follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1A/L பரீட்சை திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

A/L பரீட்சை திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

Published on

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

இதற்கு முன்னர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, தற்போது திட்டமிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை திகதிகள் திருத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, 2023 உயர்தரப் பரீட்சை நவம்பர் 27, 2023 இல் தொடங்கத் திட்டமிடப்பட்டது, ஆனால் 2022 பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் சுமார் 3 மாதங்கள் தாமதம் ஏற்பட்டதால் நிலைமையை அமைச்சர் நீண்ட நேரம் விளக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...

புத்தளத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற...