follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும்

Published on

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...