ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடான பின்லாந்து உலகிலேயே முதன்முதலாக கடவுச் சீட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் கடவுச் சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் போன் செயலி அடிப்படையில் செயல்படும் இந்த டிஜிட்டல் கடவுச் சீட்டைபயன்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டு பயணிகளுக்கு நேரம் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டம் சோதனை அடிப்படையில் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பின்னர், இத்திட்டத்தில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.