follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1கனேமுல்ல சஞ்சீவவின் தாயாரினால் ரிட் மனு தாக்கல்

கனேமுல்ல சஞ்சீவவின் தாயாரினால் ரிட் மனு தாக்கல்

Published on

பொலிஸாரின் காவலில் உள்ள கனேமுல்ல சஞ்சீவ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ சமரத்னவை பொலிஸ் விசேட அதிரடிப்படை உள்ளிட்ட சில பொலிஸ் குழுக்களின் கட்டுப்பாட்டில் வைப்பதைத் தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி அவரது தாயார் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.

கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கனேமுல்ல சஞ்சீவ தற்போது வீரகுள பொலிஸாரின் காவலில் உள்ளதாகவும், தனது மகனை விசாரணைக்காக பிரதிவாதி அதிகாரிகளின் காவலில் மாற்றினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...