follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1பொலிஸ் மா அதிபர் சேவை நீடிப்பு 9ஆம் திகதியுடன் நிறைவு

பொலிஸ் மா அதிபர் சேவை நீடிப்பு 9ஆம் திகதியுடன் நிறைவு

Published on

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் முடிவடைந்த போதும், இதுவரை அவருக்கு இரண்டு சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சி.டி.விக்ரமரத்ன, மார்ச் 25 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதல் தடவையாக அவருக்கு 3 மாத கால நீடிப்பு வழங்கியிருந்தார்.

முதல் சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் 09ம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு இரண்டாவது சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த சேவை நீட்டிப்பு இம்மாதம் 9ம் திகதியுடன் முடிவடைகிறது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மற்றுமொரு அதிகாரி நியமிக்கப்படுவாரா அல்லது சி.டி.விக்ரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்கப்படுவதா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...