follow the truth

follow the truth

May, 10, 2025
Homeவணிகம்சீமெந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் INSEE Cement

சீமெந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் INSEE Cement

Published on

INSEE Cement – தற்போது 3.6 மில்லியன் தொன் அதிகபட்ச உற்பத்தி மற்றும் இறக்குமதி திறனுடன் இயங்கி வரும் நிலையில்இ உள்ளூர் சந்தையில் நிலவும் சீமெந்திற்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மேலும் இரண்டு சரக்கு கப்பல்களை தனது இறக்குமதிச் செயற்பாடுகளில் சேர்த்துள்ளது. இலங்கையின் ஒரேயொரு உள்ளூர் சீமெந்து உற்பத்தியாளர் என்ற வகையில்இ ஐNளுநுநு ஆனதுஇ இலங்கை ரூபாயின் வீழ்ச்சியினால்இ நாட்டிலுள்ள ஏனைய போட்டி நிறுவனங்களின் சீமெந்து இறக்குமதியின் திடீர் வீழ்ச்சி ஏற்படுத்தியுள்ள வழங்கல் சங்கிலி பற்றாக்குறையை பல வாரங்களாக பொறுப்புடனும்இ உகந்த முறையிலும் கையாண்டுஇ வழிநடத்தி வருகின்றது.

‘இலங்கையின் கட்டுமானத் துறையானது வெற்றிகரமான மீண்டெழும் பாதையில் தொடர்ந்து பயணிப்பதை உறுதி செய்வதற்காக INSEE Cement அதிகபட்ச உற்பத்தித் திறனுடன் தொடர்ந்து இயங்குகிறது’ என INSEE Cement நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான குஸ்டாவோ நவாரோ தெரிவித்தார்.

‘உள்நாட்டுச் சந்தை தற்போது அனுபவிப்பது செயற்கையாக எழுந்துள்ள ஒரு பற்றாக்குறையாகும். இறக்குமதியாளர்கள் தங்கள் கையிருப்புக்களை சந்தையில் வெளியிட மறுத்ததால் இந்த நிலைமை முதலில் உருவாக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இப்போதுஇ சீமெந்து ஏற்றுமதியாளர்கள் தங்கள் சொந்த நாடுகளில் நிலவும் தேவையைப் பூர்த்தி செய்யப் போராடுவதால்இ தடைப்பட்டுள்ள வழங்கல் சங்கிலியை மீட்டெடுக்க போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவேஇ இன்று அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை தளர்த்தியுள்ள போதிலும்இ இலங்கையில் சீமெந்து இறக்குமதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்கள் இறக்குமதி நடவடிக்கைகளுக்கு மேலும் இரண்டு கூடுதல் இறக்குமதி கப்பல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த சவாலை எதிர்கொள்ள INSEE மீண்டும் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுஇ’ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரண்டு கூடுதல் கப்பல்களைத் தவிரஇ INSEE Cement தனது துரித இறக்குமதி வழங்கல் மார்க்கங்கள் மற்றும் மொத்த காவி வாகனத் தொகுதி ஆகியவற்றை மேம்படுத்திஇ தனது விசுவாசம் மிக்க வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையின்றி சந்தை விநியோகத்தை உறுதி செய்து வருகிறது. அத்துடன் இப்போது INSEE Cement ஐ நாடும் போட்டி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் கட்டுமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவ வருகிறது.

‘இங்கே உள்நாட்டில் தயாரிக்கப்படும் INSEE Cement தயாரிப்புகளான சங்ஸ்தா மற்றும் மகாவலி மெரின் பிளஸ் ஆகியவற்றின் மீதான விசுவாசத்தில் இலங்கை மக்களின் உணர்வை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த இறக்குமதி நெருக்கடியின் போது அந்த உணர்வு தொடர்பான நுண்ணறிவு அதனை நிரூபித்துள்ளது’ என்று விற்பனை சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்கத்திற்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட துணைத் தலைமை அதிகாரியான ஜான் குனிக் அவர்கள் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்

‘ஏற்றுமதி செய்யும் நாடுகள் இலங்கைக்கு மொத்த அளவிலான மற்றும் பொதி செய்யப்பட்ட சீமெந்தை தமது சந்தர்ப்பத்திற்கேற்றவாறு வர்த்தகம் செய்கின்றன. இதனால் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தினை நாம் நம்பியிருப்பது குறைக்கப்படல் வேண்டும். நாட்டில் தற்போது நிலவும் சீமெந்துப் பற்றாக்குறையை அதிகபட்ச உற்பத்தி மற்றும் இறக்குமதித் திறனுடன் நிவர்த்தி செய்யும் அதே வேளையில் புத்தளம் மற்றும் காலி ஆகிய இரு உற்பத்தி ஆலைகளிலும் உள்நாட்டு உற்பத்தியை மேலும் அதிகரிப்பதிலும்இ மேம்படுத்துவதிலும் INSEE Cement கவனம் செலுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எங்களின் வாக்குறுதியை நாங்கள் எப்பொழுதும் வழங்கியுள்ளோம். இந்த சீமெந்து பற்றாக்குறையை இலங்கை விரைவில் சமாளிப்பதை உறுதி செய்வதன் மூலம் அதை தொடர்ந்தும் செய்வோம்’ என்று குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...