follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1மறு அறிவித்தல் வரை மரைன் டிரைவ் வீதிக்கு பூட்டு

மறு அறிவித்தல் வரை மரைன் டிரைவ் வீதிக்கு பூட்டு

Published on

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பழைமை வாய்ந்த பயணிகள் மேம்பாலம் அகற்றப்படுவதால் மறு அறிவித்தல் வரை மரைன் டிரைவ் வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் மேம்பாலம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவதால், நேற்று (5) ஆரம்பிக்கப்பட்டுள்ள இடிப்புப் பணிகள் காரணமாக இந்த வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி கரையோர வீதியில் வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டிக்கு வரும் வாகனங்கள் பம்பலப்பிட்டி புகையிரத வீதியூடாக காலி வீதிக்கு சென்று பின்னர் கொள்ளுப்பிட்டிக்கு செல்ல முடியும்.

கரையோர வீதியில் கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் க்ளென் ஆர்பர் பிளேஸில் திரும்பி காலி வீதிக்கு வந்து டூப்ளிகேஷன் வீதியூடாக வெள்ளவத்தை நோக்கி செல்ல முடியும்.

மூடப்பட்ட பகுதிக்கு அப்பால் கரையோர வீதியின் இருபுறமும் வாகனங்கள் பயணிக்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5                                                                                        

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள்

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள் அமுலில் கொண்டுவரப்படும் என போக்குவரத்து...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென...