சபையில் நேற்று (21) இடம்பெற்ற ஒழுங்கீனச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற சேவையை இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்தவும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 146இன் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அது இன்று (22) முதல் அமுலுக்கு வரும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.