கொழும்பு பதுளை மலையாக ரயில் பாதையில் பாறை ஒன்று சரிந்து விழுந்துள்ளதால் மலையக ரயில் போக்குவரத்து இன்று (10) தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயில் ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் புகையிரதம் தாமதமாக சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5