follow the truth

follow the truth

May, 23, 2024
Homeஉலகம்அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : விவேக் ராமசாமி திடீர் விலகல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : விவேக் ராமசாமி திடீர் விலகல்

Published on

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது.

இதில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் காகஸ் என்ற மாகாண அளவிலான உள்கட்சி தேர்தல் தொடங்கியது. இத்தேர்தல் பாரம்பரியமாக அயோவா மாகாணத்தில் இருந்து தொடங்கப்பட்டது. நேற்று நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

அயோவா மாகாண உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், இந்த அறிவிப்பை விவேக் ராமசாமி வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை வீழ்ந்ததில் 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர். மெக்ஸிகோவில் ஜூன் 2...

ஈரான் ஜனாதிபதியின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச்...

பிரிட்டனில் ஜூலையில் பொதுத்தேர்தல்

பிரிட்டனில் ஜூலை 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற...