follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2"ரஷ்யா - உக்ரைன் போரில், ரஷ்யா தோற்றே ஆக வேண்டும்"

“ரஷ்யா – உக்ரைன் போரில், ரஷ்யா தோற்றே ஆக வேண்டும்”

Published on

கடந்த 2022 பெப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி உக்ரைனுக்கு தொடர்ந்து கிடைப்பதில் பல்வேறு காரணங்களால் சிக்கல் நிலவுகிறது.

உக்ரைனிடம் போதுமான அளவு இராணுவ தளவாடங்கள் இல்லாததால், தங்கள் நாட்டில் ரஷ்யா இராணுவம் முன்னேறி , பிராந்தியங்களை கைப்பற்றுவதை தடுப்பது கடினமாக உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறார்.

மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவிகள் கிடைப்பது தாமதமாவதால், உயிரிழப்புடன் உக்ரைனின் பல பிராந்தியங்களை ரஷியாவிடம் இழக்க நேரிடும் என உக்ரைன் ஒராணுவ அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்தார்.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின் சந்திப்பு, பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடைபெற்றது.

இதில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவல் மேக்ரான் தெரிவித்ததாவது;

“.. இப்போரில் ரஷ்யா வெற்றி பெறக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் நிலையாக இருக்க ரஷ்யா இப்போரில் தோற்க வேண்டியது அவசியம்.

ரஷ்யா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன்தான் நாங்கள் போரிடுகிறோமே தவிர ரஷ்யா மக்களுடன் அல்ல.

குறுகிய தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் உக்ரைனுக்கு விரைவில் வழங்கப்படும்.

உக்ரைனுக்கு நட்பு நாடுகளின் இராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் அதையும் பரிசீலனை செய்வோம்…”

சில தினங்களுக்கு முன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின், “நேரடியாக மேற்கத்திய நாடுகளின் இராணுவம் உக்ரைன் மண்ணில் இருந்து போரிட தொடங்கினால் அது ரஷ்யாவிற்கும் நேட்டோ (NATO) கூட்டணி நாடுகளுக்கும் எதிரான போராக மாறும் “என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...