தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனியார் பேரூந்துகள் வழங்கப்படுகின்ற போதிலும் ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகளை பேரூந்துகளில் ஒட்டுவதற்கு அனுமதியில்லை என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேரூந்துகள் வாடகை அடிப்படையில் வழங்கப்படுவதாகவும், தேர்தல் பிரசாரங்களுக்கு பேரூந்துகளை வாடகைக்கு எடுக்கும் வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியினர் பேரூந்து அல்லது பேரூந்துகளின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேருந்தின் மீது ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டுவதால் அதன் பெயிண்ட் மற்றும் உலோகம் சேதமடையும் என்றும் அவர் மேலும் கூறினார்.