ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை (9) நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆறு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஆறு பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.