follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP2மூன்று மாதங்களில் எய்ட்ஸ் நோயால் 695 பேர் பாதிப்பு

மூன்று மாதங்களில் எய்ட்ஸ் நோயால் 695 பேர் பாதிப்பு

Published on

2024 ஆம் ஆண்டின் கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 695 புதிய எச்ஐவி தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய STD மற்றும் AIDS கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் சமூக சுகாதார நிபுணர் ஜானகி விதானராச்சி தெரிவித்துள்ளார்.

இது முன்னைய 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14% அதிகரிப்பு ஆகும்.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கொழும்பில் நடத்தப்பட்ட மருத்துவ மனைகளில் கண்டறியப்பட்ட HIV STD நோயாளிகளின் எண்ணிக்கை நாற்பது சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பால்வினை நோய்கள் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் போதிய புரிதல் இல்லாத காரணத்தினால் இந்த நிலை உருவாகியுள்ளதாகவும் சுகாதார திணைக்களங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பாடசாலைக் காலத்தில் வயதுக்கேற்ற பாலினக் கல்வி வழங்கப்பட வேண்டுமென வைத்திய நிபுணரான ஜானகி விதானராச்சி குறிப்பிடுகின்றார்.

எச்.ஐ.வி மற்றும் பாலின பரவும் நோயால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், know for sure என்ற தொலைபேசி செயலி மூலம் தொடர்பு கொள்ளலாம் மற்றும் நோய் பரிசோதனைக்கு முன்பதிவு செய்யலாம். பின்னர் அவர்கள் தங்கள் சுய பரிசோதனை கருவி பற்றிய தகவல்களை இரகசியமாக வீட்டிற்கு கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...