கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக, இலங்கை போக்குவரத்து சபையின் மேலதிக பஸ்கள் இன்று (13) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக ஸ்வர்ணஹன்ச இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று (13) மற்றும் நாளை (14) சில அலுவலக புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நகரங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் இந்த நாட்களில் வழமைபோன்று இயங்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விசேட அட்டவணையின் கீழ் 06 ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது