follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP2ஈரான் - இஸ்ரேல் மோதல் : பின்வாங்கிய அமெரிக்கா

ஈரான் – இஸ்ரேல் மோதல் : பின்வாங்கிய அமெரிக்கா

Published on

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் துடித்துக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா இதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதலை கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் 1ம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தற்போதைய தாக்குதலுக்கு காரணம்.

இந்த தாக்குதல் குறித்து ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் நேற்று தாக்குதலை தொடுத்திருக்கிறது.

நேற்று இரவு மட்டும் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 99%-ஐ இஸ்ரேல் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இஸ்ரேல் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியிருக்கிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியான எந்த திட்டமும் இல்லையென இஸ்ரேல் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கலந்துரையாடியுள்ளார். அப்போது, ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் நாங்கள் உதவ மாட்டோம் என்று பைடன் தெளிவுப்படுத்திவிட்டார். இருவருக்குமான உரையாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்தாலும், என்ன பேசினார்கள் என்பது குறித்து வெளிப்படையான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், வெள்ளை மாளிகை மற்றும் டெல் அவிவின் நெருங்கிய வட்டாரங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவ முன்வரவில்லை என்கிற தகவலை தெரிவித்திருக்கின்றன.

ஏற்கெனவே ஹமாஸை அழிப்பதாக கூறி இஸ்ரேல் நடத்திய எல்லா தாக்குதலுக்கும் அமெரிக்கா துணை நின்றிருக்கிறது என்பதை உலக நாடுகளுக்கு நன்கு தெரியும். இந்த சூழலில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா உதவினால், அது நிச்சயம் 3ம் உலகப் போராக வெடிக்கும்.

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகியவை வரிசைகட்டி நிற்கும். எனவே இஸ்ரேல் தனது பழிவாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.

இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. நேற்று முன் தினம் இரவு ஈரான் ஏவிய ஏவுகணைகளை சமாளிக்க 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் செலவு செய்திருக்கிறது. எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதல் என இறங்கினால் ஈரான் சும்மா இருக்காது. இவையெல்லாம் செலவுகளை இழுத்துவிட்டுவிடும் என்பதாலும், அமெரிக்கா இதில் மௌனம் காக்க இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. எனவே இஸ்ரேல், ஈரான் மீதான பதிலடி தாக்குதலை கைவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....